இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் மாலை ஐந்து மணிக்கு அனைத்து கட்சி கூட்டம்.

by Admin / 25-03-2026 02:08:00am
இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் மாலை ஐந்து மணிக்கு அனைத்து கட்சி கூட்டம்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் மாலை ஐந்து மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.மேற்காசியாவில் நிலவும் போர் சூழலால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் ஹோ முஸ் நீரினை  கடல்வழிப் பாதையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ,உர விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாட்டை பயன்படுத்தி நாட்டில் பதுக்கல் மற்றும் கருப்பு சந்தை விற்பனையை தடுக்கவும் விலை உயர்வை கட்டுக்குள் வைக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  வளைகுடா நாடுகளில் வசிக்கும் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் அங்கிருந்து அவர்களை மீட்பது போன்ற விஷயங்களும் பேசப்படும். எரிபொருள் விநியோக சங்கிலி மற்றும் உரங்கள் தொடர்பான சிக்கல்களை கையாள ஏற்கனவே அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் அடங்கிய தனித்தனி குழுக்களை அமைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே திட்டமிட்டுள்ள கேரள பயணத்தினால் இக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories