பெண் கொலை வழக்கில் பழைய இரும்பு கடைக்காரர் கைது

மதுராந்தகம் அடுத்த சின்ன கொளம்பாக்கம் பகுதியில் வசித்தவர் காளியம்மாள் (42). இரு நாட்களுக்கு முன் காணாமல் போனதாக, படாளம் போலீசில் அவரது மகள் புகார் அளித்திருந்தார்.
படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காளியம்மாளை தேடிவந்தனர். நேற்று முன்தினம், பழைய காயலான் கடையில், மூட்டையில் அழுகிய நிலையில் காளியம்மாள் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், காயலான் கடை உரிமையாளர் சிவகுமாரை, போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று, அச்சிறுபாக்கம் அருகே பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்ற போலீசார், அவரை மடக்கி பிடித்தனர்.பின், சிவகுமாரிடம் நடத்திய விசாரணையில், படாளம் பகுதியில் சிறிய உணவகம் நடத்தி வந்த காளியம்மாள் என்பவருக்கும், சிவகுமாருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து உள்ளது.
இதில், தன்னிடம் வாங்கிய பணத்தைக் கேட்கச் சென்ற காளியம்மாளுக்கும், சிவகுமாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அவரை அடித்து, கழுத்தை நெரித்து கொன்றதாக, சிவகுமார் கூறியதாக, போலீசார் தெரிவித்தனர்.தொடர்ந்து, சிவகுமாரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
Tags :