கடலில் குளிக்க சென்ற மாணவர்கள் இருவர் மாயம் தேடும் பணியில் போலீசார்
புதுச்சேரி மாநிலம் கருவாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர்கள் தீபன் மற்றும் சண்முகம் உட்பட 6 பேர் பள்ளி மாணவர்கள் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த பெரிய முதலியார் சாவடி பகுதியில் உள்ள கடற்கரையில் குளிக்க சென்றுள்ளனர் இதில் 6 பேரும் கடலில் குளித்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக ராட்சச அலையில் சிக்கி தீபம் மற்றும் சண்முகம் அலையில் இழுத்துச் சொல்லப்பட்டனர் உடனே அருகில் இருந்த மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அலையில் நிறுத்து செல்லப்பட்டவர்களின் உடலை தேடும் பணியில் மீனவர்களும் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடலில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் ராட்சச அலையில் சிக்கி மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Tags :



















