கல்வி சமத்துவமாக இருக்க வேண்டும்: ஆசிரியர்களிடம் மோடி அறிவுறுத்தல்
"கல்வி சமத்துவமாக இருக்க வேண்டும்,'' பிரதமர் மோடி ஆசிரியர்கள் மத்தியில் பேசுகையில் அறிவுறுத்தினார்.
இன்று கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி, ஆசிரியர்களுடன் காணொலி வாயிலாக பேசியதாவது:
தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். கடினமான சூழ்நிலையிலும் பணியாற்றிய உங்களது முயற்சிகள் பாராட்டுக்குரியது. இன்று துவங்கப்பட்ட திட்டங்கள் கல்வித்துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும். பள்ளியின் தர மதிப்பீடு மற்றும் உறுதிப்பாடு போட்டித்தன்மையுடன் ஆக்குவது மட்டுமல்லாமல், மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும்.
அனைத்து ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்களிடமும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளேன். அதாவது, ஒவ்வொரு வீரரும் 75 பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும், பள்ளிகளில் மாணவர்களுடன் ஒரு மணிநேரம் செலவிட்டு, விளையாட்டுக்கு அவர்களை ஊக்கப்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளேன்.
ஆடியோவில் புத்தகங்கள்
கல்வி சமத்துவமாகவும் இருக்க வேண்டும். ஆடியோ வடிவிலான புத்தகங்கள் கல்வி முறையின் ஒரு பகுதியாகும். இந்திய சைகை மொழிக்கான அகராதி உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக, இந்திய சைகை மொழியை ஒரு பாடமாக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியா சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டம் ஆசாத் கா அம்ரித் மகோத்வசத்தின் ஒரு பகுதியாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருக்கும் வீரர்கள் நாட்டில் 75 பள்ளிகளுக்கு விஜயம் செய்ய வேண்டும். மாணவர்ளுடன் கலந்துரையாட வேண்டும். விளையாட்டிலும் பங்கெடுக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Tags :