மனைவி குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்து மிரட்டிய கணவன்
மகாராஷ்டிரா: புனேவை சேர்ந்த அரசு ஊழியருக்கு கடந்த 2020-இல் திருமணம் நடந்தது. அவர் மனைவியும் அரசு ஊழியர் ஆவார். மனைவி மீது சந்தேகப்பட்டு வந்த கணவர் வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தினார். இதில் உச்சக்கட்டமாக மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து அதை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி போலீஸ் புகார் கொடுத்தார். அதன்பேரில் குடும்பத்தினர் 7 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
Tags :



















