பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை வெளியிடுவேன்” – பழ.நெடுமாறன்

மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள கிருஷ்ணய்யர் அரங்கில், தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் ஆகியோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், ”பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று நான் கூறியதற்கு யாரும் உடன்படவில்லை என்று சொல்வது மிகவும் தவறானது. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று நான் கூறியது, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் புதிய நம்பிக்கையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்தவுடன், அதனை ஊடகத்தினர் முன்பாக வெளியிடுவேன். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவலை கூறிய பின்னர் மக்கள் ஆதரவு அதிகமாக கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.கடந்த பிப்.13ம் தேதி, செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தெரிவித்தார். இவரது கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்த நிலையில், சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Tags :