தூக்கில் தொங்கிய நிலையில் பாஜக தலைவர்

by Staff / 08-11-2023 03:04:04pm
தூக்கில் தொங்கிய நிலையில் பாஜக தலைவர்

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தலைவர் உடல் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மாவட்டத்தில் உள்ள நித்திராம்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாஜக தலைவர் சுப்தீப் மிஸ்ரா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த ஏழு நாட்களாக சுப்தீப் மிஸ்ராவை காணவில்லை என தேடி வந்த நிலையில் இன்று அவரது உடல் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மேலும், மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மூன்றடுக்கு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories