கோவில்பட்டி பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை

by Editor / 16-03-2025 07:25:15pm
கோவில்பட்டி பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் இன்று காலை முதல் மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது மட்டுமின்றி, மதியத்திற்கு மேல் லேசான சாரல் மழையுடன் மழை தொடங்கியது. நேரம் செல்ல செல்ல சாரல் மழை பலத்த மழையாக பெய்தது. சுமார் 30நிமிடங்கள் மழை பெய்தது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி எட்டயபுரம், கொப்பம்பட்டி, இனாம் மணியாச்சி, பாண்டவர் மங்கலம், நாலாட்டின்புதூர், திட்டங்குளம், மூப்பன்பட்டி,  இலுப்பையூரணி, திட்டங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
 

 

Tags : கோவில்பட்டி பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை

Share via