கமல்ஹாசன் 71-வது பிறந்தநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

by Admin / 07-11-2025 09:44:51am
கமல்ஹாசன்  71-வது பிறந்தநாள்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வாழ்த்து

 நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் இன்று தனது 71-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.. தி.மு.க தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில்,

 பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் - பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும்ம.நீ.ம-இன் தலைவர் - கலைஞானிகமல்ஹாசன்அவர்களுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்! நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, நாடாளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன் என்று கமல்ஹாசனைப் பாராட்டியுள்ளார்.

மேலும், பல கட்சித் தலைவர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற வழிகளில் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்

..அவர் 1954 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். .அவரது பிறந்த நாளையொட்டி, திரையரங்குகளில் அவரது கிளாசிக் திரைப்படமான 'நாயகன்' மீண்டும் வெளியிடப்பட்டு, அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

 

 

 

 

 

 

Tags :

Share via

More stories