தமிழகத்தில் சாலைவிரிவாக்கம் அதிகளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளனஆய்வில் தகவல்.

இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 50 லட்சம் மரங்கள் அழிந்துவிட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய இந்தியா மற்றும் மகாராஷ்டிராவில் மரங்கள் வெட்டப்படுவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் உள்ள நெல், கோதுமை போன்ற பயிர்களுக்கு வழி வகுக்கும் வகையில் பெரிய அளவில் மரங்கள் அகற்றப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவிலும் சாகுபடி நிலங்களில் பல ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டுள்ளன என ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : தமிழகத்தில் சாலைவிரிவாக்கம் அதிகளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளனஆய்வில் தகவல்.