பவானி ஆற்றில் வெள்ளம்-தாய் - மகள் பலி

by Editor / 20-08-2021 10:52:12am
பவானி ஆற்றில் வெள்ளம்-தாய் - மகள் பலி

 பவானி ஆற்றில் வெள்ளம் திடீரென வந்ததால், நீரில் 3 பேர் சிக்கி கொண்டனர்.. இதையடுத்து நடந்த துரித மீட்பு பணியில் தாய், மகள் இருவரும் பலியான நிலையில், ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே பில்லூர் அணை கட்டப்பட்டு உள்ளது... மின்சாரம் தயாரிப்பதற்காக இங்கிருந்து தினமும் ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்படும்.அந்த தண்ணீரானது மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக செல்லும் பவானி ஆறு மூலம் பவானிசாகர் அணைக்கு சென்றடைகிறது... திடீரென்று ஆற்றில் தண்ணீர் அடிக்கடி திறக்கப்படுவதால், வெள்ளமும் கரை புரண்டது..

மேட்டுப்பாளையம் தந்தை பெரியார் வீதியை சேர்ந்த சக்திவேல் மனைவி சங்குபதி.. 50 வயதாகிறது.. இவரது மகள் கவிதா 30 வயதாகிறது.. பேத்தி சாதனா 13 வயதாகிறது.. இவர்கள் 3 பேரும் நேற்று பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றார்கள்.. 3 பேரும் உப்புப்பள்ளம் பகுதியில் பவானி ஆற்றுக்குள் இறங்கி ஒரு மண் திட்டில் உட்கார்ந்து துணிகளை துவைத்துக்கொண்டு இருந்தனர்.

அப்போதுதான், பில்லூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது பாய்ந்து வந்தது... இதை பார்த்து உடனே அங்கிருந்தவர்கள், "வெள்ளம் வருது.. வெள்ளம் வருது" என்று அலறி கூச்சலிட்டனர்.. ஆனால் நீர் சத்தத்தில் அவர்கள் கத்தியது இவர்களுக்கு கேட்கவில்லை... வெள்ள நீர் அருவில் பாய்ந்து வந்த பிறகுதான் அதை பார்த்து 3 பேருமே அதிர்ச்சி ஆனார்கள்.. பிறகு, சுதாரித்து கொண்டு கரையை நோக்கி ஓடி வர முயற்சி செய்தனர்... ஆனால், அதற்குள் வெள்ளம் அவர்கள் 3 பேரையுமே இழுத்து சென்றுவிட்டது.

இதனால், அங்கிருந்தோர் ஆற்றுக்குள் குதித்து அவர்களை காப்பாற்ற முயன்றனர்... எவ்வளோ தேடியும் தாயும் மகளும் கிடைக்கவில்லை... சாதனாவை மட்டும்தான் உயிருடன் மீட்க முடிந்தது... வெள்ளம் வந்த வேகத்திலேயே அவர்கள் பேரையும் அடித்து கொண்டு போய்விட்டிருந்தது.. இது குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்..ஆனால் அவர்களாலும் காப்பாற்ற முடியவில்லை. தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டிருந்தனர்.. ஒரு மணி நேர கடின போராட்டத்துக்கு பிறகு சங்குபதி, கவிதாவின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.. போஸ்ட் மார்ட்டத்துக்காக அந்த உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது

 

Tags :

Share via