முதலமைச்சர் நீண்ட பயணங்களை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அந்த பாதிப்பில் இருந்து அவர் விடுபட்ட நிலையில், தொடர்ந்து அரசு பணிகளையும், கட்சி பணிகளையும் கவனித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு அவருக்கு முதுகு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அதன்பின்னர், அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட பயணங்களை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக நாளை பசும்பொன்னில் நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் அவர் கலந்துகொள்ளமாட்டார் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Tags :