ரெயில்வே தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

by Staff / 26-01-2023 05:21:48pm
ரெயில்வே தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்னக ரெயில்வே தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் பாஸ்கர், ஓடும் தொழிலாளர் பிரிவு செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஓடும் தொழிலாளர் பிரிவு கோட்ட தலைவர் சரவணன், ஓடும் தொழிலாளர் பிரிவு துணை செயலாளர் சாம் சுந்தர் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி சினர்.ஆர்ப்பாட்டத்தில் இடம் மாறுதல் செய்யப்பட்டவர்களை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும். ஓடும் தொழிலாளர்களுக்கு உடனே பதவி உயர்வு வழங்க வேண்டும்உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

 

Tags :

Share via

More stories