பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா மகாதீபம், .

by Editor / 19-11-2021 06:58:23pm
பழனி முருகன் கோவிலில்  கார்த்திகை தீப திருவிழா மகாதீபம், .

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் விமர்சையாக நடைபெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா. திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலை மீது சென்று சாமி தரிசனம் செய்தனர்.  கொரோனோ வைரஸ் தொற்று பரவல் காரணமாக  மாலையில் நடைபெறக்கூடிய மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.  மலைமீதுள்ள முருகன் கோயிலில் மாலையில் சாயரட்சை பூஜைக்கு பிறகு விநாயகர், சின்னகுமாரருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலை மீதுள்ள தீபஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பனை ஓலைகளால் உருவாக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்யும் போது தங்கள் மனதில் உள்ள தீய எண்ணங்களும் எரிந்து சாம்பலாகி, நல்ல சிந்தனைகள் மேலோங்குவது ஆக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில்  பக்தர்கள் கூட்டம் இன்றி மலைமீது
 சொக்கப்பனை கொளுத்தும் கூடிய நிகழ்ச்சியானது நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் ஊழியர்கள் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு கோயில் நிர்வாகம் இணைய வழியில் ஏற்பாடு செய்திருந்தது.

 

Tags :

Share via