நிலக்கரி சுரங்க விவகாரம்: அமைச்சர் திட்டவட்டம்

by Staff / 05-04-2023 01:53:37pm
நிலக்கரி சுரங்க விவகாரம்: அமைச்சர் திட்டவட்டம்

தமிழகத்தின் டெல்டாவில் நிலக்கரி சுரங்க ஏல விவகாரத்தில் முதலமைச்சர் வேகமாக செயல்பட்டு, உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நிலக்கரி சுரங்கம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது சட்டப்பேரவையில், அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நிலக்கரி அமைச்சகத்திடம் வலியுறுத்திய அதிகாரிகளும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என கூறியுள்ளனர். தமிழ்நாடு அரசு ஒருபோதும் இத்திட்டத்தை அனுமதிக்காது என்பதை திட்டவட்டமாக கூறுகிறோம் என்றார்.

 

Tags :

Share via