என்ன மொழி என்றே தெரியாமல் ஆங்கிலத்தை அழித்த திமுகவினர் - சமூக வலைதளங்களில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது

by Staff / 25-02-2025 04:00:07pm
என்ன மொழி என்றே தெரியாமல் ஆங்கிலத்தை அழித்த திமுகவினர் - சமூக  வலைதளங்களில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது

மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிராக திமுகவினர் தமிழகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், கடந்த இரு தினங்களாக ரயில் நிலையத்தில் உள்ள ஹிந்தி பெயர்களை திமுகவினர் அழித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நேற்றைய தினம் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்தை அழித்து திமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில், அதற்கு முன்னதாக ஹிந்தி எழுத்து தெரியாமல் ஆங்கிலத்தை அழித்தனர்.

அதைப் பார்த்த சில திமுக நிர்வாகிகள் சிலர் ஹிந்தி எழுத்து மேலே உள்ளதாகவும், கீழே அழிப்பது ஆங்கில எழுத்து எனக் கூறவே உஷாரான திமுகவினர் ஐயோ இது வேற எழுத்தா என்கிறது போல, மறுபடியும் இந்தியை அழித்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ள நிலையில் என்ன மொழி என்று தெரியாமலே திமுகவினர் தவறுதலாக இரு மொழிக் கொள்கையில் உள்ள ஒரு மொழியை அழித்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via