நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்

by Admin / 08-04-2026 11:14:36pm
 நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்

 நெல்லை ,பாளையங்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் , திமுக தலைமையிலான கூட்டணி, ஊழல் செய்து சேர்த்த பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கல்லாப்பெட்டி கூட்டணி என்று விமர்சித்தோடு தற்போது தி.மு.க-விடம் முழு அதிகாரம் இருந்திருந்தால் இந்தப் பொதுக்கூட்டத்தையே அவர்கள் தடுத்திருப்பார்கள் என்றும் விஜய் குறிப்பிட்டார்.

தனக்குக் கொடுக்கப்படும் இடங்கள் மற்றும் பிரச்சார முறைகள் மீது ஆளுங்கட்சி மறைமுகக் கட்டுப்பாடுகளை விதிப்பதாக அவர் முன்னதாகவே குற்றம் சாட்டியிருந்தார். தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். 

காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதி உண்மையாகத் தங்கள் பக்கம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தி.மு.க சிறுபான்மை மக்களின் ஆதரவை இழந்து வருவதாகக் கூறினார்.

33 ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் மக்களின் மனதுக்குள்ளும் நுழைய நான் பட்ட பாடு எனக்குத் தெரியும். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்ற பின்னரே நான் கட்சியைத் தொடங்கினேன் என்று உருக்கமாகப் பேசினார்.: தி.மு.க-வும் பா.ஜ.க-வும் தன் மீது கொண்டுள்ள கோபத்தைப் பற்றித் தனக்குக் கவலையில்லை என்றும் உண்மையான மதச்சார்பற்ற கொள்கையுடன் தான் செயல்படுவதாகவும் உறுதிபடக் கூறினார்
 
தி.மு.க மற்றும் பா.ஜ.க தலைமையிலான இரண்டு கூட்டணிகளுமே ஊழலுக்கு எதிரான சூழல் உருவாவதைக் கண்டு அச்சப்படுவதாகவும் தனக்கு எதிராக இந்த இரு தரப்பும் மறைமுகமாக கைகோர்த்து செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

 இந்தக் கூட்டணிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்றும் ஒரு கட்சியின் தொண்டர்கள் மற்றொரு கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

 திமுக கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து தமிழக காங்கிரஸைவிலைக்கு வாங்கிவிட்டது என்றும்  உண்மையான காங்கிரஸ் த.வெ.கவுடன் தான் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தப் பொதுக்கூட்டம் திருநெல்வேலி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

 நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
 

Tags :

Share via
Logo