புதிய தலைமைச் செயலாளராக எம் சாய் குமாரை நியமித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமைச் செயலாளர் என் முருகானந்தத்தை பணியிடம் மாற்றம் செய்து புதிய தலைமைச் செயலாளராக எம் சாய் குமாரை நியமித்துள்ளது. இவர் 1990 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி.. இதற்கு முன் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவராக பணியாற்றியவர். இதே போன்று லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சந்திப் மெட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபை தேர்தலின் போது அரசு நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் ஒரு சார்பாக செயல்படுகிறார்கள் என்ற எதிர்க்கட்சிகளின் புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு தலைப்பட்சமானது மற்றும் பா.ஜ.கவின் தூண்டுதலால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் தேர்தல் முடியும் வரை எந்த ஒரு தேர்தல் தொடர்பான பணிகளிலும் ஈடுபடுத்தப்படக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Tags :


















