திமுக ஆட்சியில் மணல் கொள்ளையை குறைத்துள்ளோம்- கே.கே.எஸ் எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

by Editor / 01-10-2022 05:11:32pm
திமுக ஆட்சியில் மணல் கொள்ளையை குறைத்துள்ளோம்- கே.கே.எஸ் எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு குடும்பத்துடன் வந்தார். பின்னர் கோவிலில் உள்ள சூரஷம்கார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து குடும்பத்துடன் வழிபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது..

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர்   தலைமையில் அனைத்துதுறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து மேலும் தனி ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்த அவர் மணல் கொள்ளை விவகாரத்தில் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு சொல்வதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுப்பதும் எல்லா ஆட்சியிலும் தொடர் கதையாக உள்ளது. திமுக ஆட்சியில் மணல் கொள்ளையை குறைத்துள்ளோம்.

முதியோர் பென்ஷன் திட்டத்தில் அதிமுக ஆட்சியில் நான்காயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதில் திமுக ஆட்சியில் பாதி பேரை இணைத்துள்ளோம். மேலும் நீக்கப்பட்ட நபர்களை  மறு ஆய்வு செய்து தகுதி உள்ளவர்கள் இணைக்கப்படுவார்கள் என விளக்கமளித்த
 அவர்
உங்கள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிய செய்ய வேண்டும் என புகார் வந்ததைப் பற்றி கேட்டதற்கு இவ்வளவு நேரம் நன்றாக தான் போய்க்கொண்டு இருந்தது. இது சகஜம்தான் என மழுப்பலாக சொல்லிவிட்டு நகர்ந்து சென்றார்.

 

Tags :

Share via

More stories

Logo