ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. 

by Writer / 01-10-2022 08:11:24pm
 ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. 

  ஜிஎஸ்டிமொத்த வருவாய் செப்டம்பர் 2022 இல்  ரூ.1,47,686 கோடி, இதில் சிஜிஎஸ்டி ரூ.25,271 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.31,813 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.80,464 கோடி.அரசு 31,880 கோடி ரூபாய்  சிஜிஎஸ்டி க்கும், 27,403 கோடிஎஸ்ஜிஎஸ்டி க்கும் ஐ ஜிஎஸ்டியிலிருந்து வழங்கியுள்ளது. செப்டம்பர் 2022 இல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய்  சிஜிஎஸ்டி ரூ 57,151 கோடியும்,எஸ்ஜிஎஸ்டி ரூ 59,216 கோடி.கடந்த ஆண்டு  செப்டம்பர்  மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 26% அதிகமாகும். மாதத்தின் போது, ​​பொருட்களின் இறக்குமதியின் வருவாய் 39 விழுக்காடு அதிகமாக இருந்தது. உள்நாட்டு பரிவர்த்தனைவருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட   22 விழுக்காடு அதிகமாகும்., தற்போது தொடர்ந்து ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. 

 

Tags :

Share via