வீரர்கள் மூன்று நாள் விண்வெளிப் பயணம்

by Editor / 19-09-2021 05:27:29pm
வீரர்கள் மூன்று நாள் விண்வெளிப் பயணம்

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளி குறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. எதிர்காலத்தில் பணம் படைத்தவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது போல விண்வெளிக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறார் எலான் மஸ்க்.ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்பேஸ் காப்ஸ்யூல் நான்கு விண்வெளி வீரர்களை சுமந்து கொண்டு, கடந்த மூன்று நாட்களாக உலகை சுற்றி வந்தது. அதிவேகமாக பயணிக்கும் இந்த விண்வெளி காப்ஸ்யூல் ஒரு நாளில் 15 முறை உலகை சுற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. செயற்கைக்கோள்கள் ராக்கெட் லாஞ்சர்கள் மூலமாக விண்வெளியில் ஏவப்படுகின்றன. இவை புவி வட்டப்பாதையில் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும்.

அவற்றால் பத்திரமாக பூமிக்கு வந்து தரையிறங்க முடியாது. ஆனால் ஸ்பேஸ் கேப்ஸ்யூல் எனப்படும் சிறிய ரக விண்வெளி ஓடங்கள் மூன்று நாட்கள் புவி வட்டப்பாதையில் சுற்றி முடித்தவுடன் பத்திரமாக பாராசூட் உதவியுடன் கடலில் வந்து இறங்கும்.Splashdown! Welcome back to planet Earth, @Inspiration4x! pic.twitter.com/94yLjMBqWt- SpaceX (@SpaceX) September 18, 2021ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது விண்வெளி கேப்ஸ்யூல் மூலம் நான்கு விண்வெளி வீரர்களை புவி வட்டப் பாதைக்கு அனுப்பி இருந்தது.

இதில் விண்வெளி வீராங்கனை சியான் ப்ரோக்டர் உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் அதிவேகத்தில் புவி வட்டப்பாதையை மூன்று நாட்களாக சுற்றி வந்தனர். இறுதியாக அட்லாண்டிக் கடலில் இந்த விண்வெளி கேப்ஸ்யூல் பத்திரமாக வந்திறங்கியது.Nothing but #gratitude!! Thank you to everyone who helped make our mission a success and supported us through this historic journey. ‍@inspiration4x @SpaceX #Space2inspire https://t.co/W0PgPn6fpu- Dr. Sian "Leo" Proctor (@DrSianProctor) September 19, 2021இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சியான், தங்களது பயணம் மிகவும் மிக சுவாரசியமாக அமைந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், விண்வெளி வீரர்களுக்கு வழிகாட்டும் அனலாக் அஸ்ட்ரானாட் ஆக பணியாற்றிய தனக்கு விண்ணில் கேப்ஸ்யூல்லில் செல்ல வாய்ப்பளித்த நிறுவனத்துக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.இதேபோல எதிர்காலத்தில் பல விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்வெளி நிறுவனம் விண்ணுக்கு அனுப்பி விண்வெளி சுற்றுலா குறித்து மேலும் பல விண்வெளி தகவல்களைத் திரட்டவும் தொடர் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளது 

 

Tags :

Share via