ஏடிஎம் கொள்ளையன் சவுகத் அலிக்கு போலீஸ் காவல்

by Editor / 06-07-2021 07:07:34pm
ஏடிஎம் கொள்ளையன் சவுகத் அலிக்கு போலீஸ் காவல்



சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளை அடிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
கொள்ளையர்கள் டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியானதை அடுத்து ஹரியானா சென்ற தனிப்படை போலீசார் தொடர்ச்சியாக நான்கு பேர்களை கைது செய்தனர். இவர்களில் நான்காவதாக கைது செய்யப்பட்டவர் தான் சவுக்கத்அலி. இந்த சவுக்கத்அலி தான் எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையர்களின் தலைவன் என்றும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சவுக்கத் அலியை அரியானாவில் இருந்து சமீபத்தில் சென்னை அழைத்து வந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது சவுக்கத் அலியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர்.இந்த நிலையில் கொள்ளை கும்பல் தலைவன் சவுக்கத் அலியை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் தற்போது அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பெரியமேடு போலீசார் சவுக்கத் அலியை  விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
மேலும் சவுக்கத் அலியிடம் இருந்து கொள்ளையின் ஒட்டுமொத்த தகவல்களையும் திரட்ட காவல்துறையினர் முடிவு செய்திருப்பதால் இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via