காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது - இபிஎஸ்

by Staff / 03-09-2024 03:36:09pm
காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது - இபிஎஸ்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via

More stories