விழுப்புரம்: பெரியார் சிலைக்கு மரியாதை செய்த ராமதாஸ்
விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில், இன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி, பாமக நிறுவனர் ராமதாஸ் பெரியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி, ராமதாஸின் மகள் காந்திமதி உட்பட கட்சி நிர்வாகிகள் இருந்தனர். அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கி அறிவித்த ராமதாஸ், மகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags :



















