கன்னியாகுமரி கோவிலில் இன்று மொரிசியஸ் நாட்டு ஜனாதிபதி வருகை

மொரிசியஸ் நாட்டு ஜனாதிபதி பிரித்தீவ் ராஜ் சிங் ரூபன் நேற்று கன்னியாகுமரி வந்தார். அவருக்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன் பிறகு அவர் மாலை 6-20 மணிக்கு கன்னியாகுமரி சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதிக்கு சென்று கடலில் சூரியன் மறைந்த காட்சியை கண்டு களித்தார். இரவு கன்னியாகுமரியில் தங்கினார்.
2-வது நாளாக இன்று அதிகாலை 6 மணிக்கு முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதிக்கு சென்றார். அங்கு நின்ற படி சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தார். அதன் பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். இங்கு வந்து அவரை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்புஅளித் தனர். அதன் பிறகு அவர் பகவதி அம்மன் கோவிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.பின்னர் அவர் அனைத்து சுற்றுலா பகுதிகளையும் பார்வையிட்டார். மொரிசியஸ் நாட்டு ஜனாதிபதி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது.
Tags :