இந்து கோயில் மீது தாக்குதல்... பாகிஸ்தானில் 50 பேர் கைது...

by Admin / 08-08-2021 12:54:33pm
இந்து கோயில் மீது தாக்குதல்... பாகிஸ்தானில் 50 பேர் கைது...

பாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பஞ்சாப் மாநிலம் ரஹீம் யார் கான் மாவட்டத்தில் உள்ள சித்தி விநாயகர்  கோயில் மீது அண்மையில் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றமும் இந்த செயலை வன்மையாக கண்டித்திருந்தது.

இதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையாக 150 பேர் மீது வழக்கு பதிந்த பாகிஸ்தான் போலீசார், அவர்களில்  50 பேரை கைது செய்துள்ளனர்.
 
மேலும் சேதமடைந்த அந்த கோயிலை சீரமைக்கும் பணியும் வேகமாக நடந்துவருவதாக அம்மாநில முதல்வர் உஸ்மான் புஸ்தார் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo