அடக்கம் செய்ய பணம் இல்லாததால் சடலத்துடன் வீட்டில் இருந்த பெண்
கோபிசெட்டிபாளையம் அருகே இறந்து போன கணவன் மற்றும் தாயார் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததல் மகனுடன் ஒரு வார காலமாக வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த பரிதாபம்.இறந்த சடலங்களை அடக்கம் செய்ய ஏற்படும் முழு செலவையும் கோபி காவல்துறையினர் ஏற்றுக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை குமணன் வீதியை சேர்ந்தவர் நடராஜன் மனைவி கனகாம்பாள் (80 வயது). இவருடைய மகள் சாந்தி(60).சாந்திக்கு திருமணமான பின்பு கணவர் மோகனசுந்தரம், மகன் சரவணக்குமார்(34), மகள் சசிரேகா என்ற மகளுடன் தாயார் வீட்டிலேயே இருந்து வந்தார்.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகள் சசிரேகாவிற்கு திருமணமாகி காங்கேயத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்று விட்டார்.இந்த நிலையில் குமணன் வீதி பகுதியில் உள்ள அதிக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சாந்தியின் வீட்டின் முன்பு துர்நாற்றம் வீசியதால் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.அப்போது வீட்டினுள் சாந்தியின் அம்மா கனகாம்பாள் மற்றும் அவரது கணவர் மோகனசுந்தரம் ஆகிய இரண்டு பேரும் அழகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.தொடர்ந்து வீட்டினுள் அழகிய நிலையில் இறந்து கிடந்த இரண்டு பேரின் உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.தொடர்ந்து காவல்துறையின் மேற்கொண்ட விசாரணையில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாததால் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததாக சாந்தி தெரிவித்துள்ளார்.மேலும் கணவர் இறந்து 7 நாட்கள் ஆனதாகவும் அம்மா இருந்து இரண்டு நாட்கள் ஆனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை காவல்துறையினர் தங்கள் சொந்த செலவில் நல்லடக்கம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.
Tags :