போலீஸ் மிதித்து ஒரு மாத குழந்தை பலி

ராஜஸ்தானில் சைபர் கிரைம் தொடர்பாக கடந்த மார்ச் 1ஆம் தேதி சோதனை செய்ய சென்றபோது போலீஸ் மிதித்து ஒரு மாத குழந்தை பலியானதாக குழந்தையின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மோசடி நபரை கைது செய்ய சென்றபோது, தாயின் அருகே உறங்கிய குழந்தையை போலீசார் மிதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்த நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :