காணாமல் போன 7 வயது சிறுமி மீட்பு

by Staff / 13-05-2024 04:14:26pm
காணாமல் போன 7 வயது சிறுமி மீட்பு

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர், கன்னியாகுமரியில் பாசி மாலை விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது 7 வயது மகள் நேற்றிரவு காணமால் போனதை தொடர்ந்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குமரி போலீசார், 5 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று (மே 13) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சிறுமி மீட்கப்பட்டார். தொடர்ந்து, கடத்தல் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via