குடோனில் இருந்து உணவு தானியங்களை திருடிய 3 பேர் கைது.

by Admin / 13-05-2024 04:11:44pm
குடோனில் இருந்து உணவு தானியங்களை திருடிய 3 பேர் கைது.

தூத்துக்குடி அருகேயுள்ள குளத்தூர் வீரபாண்டியபுரத்தில் குறுக்குச்சாலையைச் சேர்ந்த சந்திரன் என்பவர் குடோன் வைத்து அதில் உளுந்து, பாசிப்பயிறு, கம்பம்புல் ஆகிய உணவு தானியங்களை மொத்தமாக வாங்கி சேமித்து வைத்து பின்னர் அதனை விற்பனை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் சந்திரன் தனது குடும்பத்தினருடன் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியூர் சென்றார், போகும் போது குடோன் அருகே உள்ள பகுதியில் டீக்கடை நடத்தி வரும் வீரபாண்டியபுரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சண்முகஜோதி (36) என்பவரிடம் சாவியை கொடுத்துவிட்டு சென்றதாகவும், இந்நிலையில் குடோனில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட சண்முகஜோதி இது குறித்து சந்திரனுக்கு தகவல் கூறினார். பின்னர் அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அவரது புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முத்துக்குமாரசாமிபுரத்தை சேர்ந்த மாரியப்பன் (42), வெள்ளத்துரை பெருமாள் (29) பெருமாள்சாமி (38) ஆகியோர் இணைந்து குடோன் பூட்டை உடைத்து உணவு தானிய மூடைகளை திருடியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த லோடு வேன், ரூ 80 ஆயிரம் மதிப்புள்ள 12 மூடை உளுந்து, பாசிப்பயிறு 2 மூடை, கம்பம்புல் 2 மூடை ஆகியவற்றையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

குடோனில் இருந்து உணவு தானியங்களை திருடிய 3 பேர் கைது.
 

Tags :

Share via