உத்தரகாண்ட் மாநிலத்தில் பிடிப்பட்ட அரியவகை இரண்டு தலை நாகப்பாம்பு

by Editor / 14-08-2021 09:04:29pm
உத்தரகாண்ட் மாநிலத்தில் பிடிப்பட்ட அரியவகை இரண்டு தலை நாகப்பாம்பு

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அரியவகை இரண்டு தலை நாகப்பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது. இந்த பாம்பு அங்குள்ள விகாஸ் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்கூட வளாகத்தில் இருக்கின்ற தகவல் வனத்துறைக்கு சென்றுள்ளது. உடனடியாக வனத்துறையின் பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்த அடில் மிர்சாவை அழைத்துள்ளனர். 
'வனத்துறை அதிகாரிகள் என்னிடம் அந்த பாம்பை பத்திரமாக மீது வருமாறு சொல்லி இருந்தனர். நான் அந்த இடத்திற்கு சென்ற பிறகு தான் அது இரண்டு தலை கொண்ட நாகப்பாம்பு என்பதை அறிந்தேன்.
15 ஆண்டு காலம் பாம்புகளை பிடிக்கும் பணியை செய்து வருகிறேன். எனது பணி அனுபவத்தில் இரண்டு தலை கொண்ட நாகப்பாம்பை பார்ப்பது இதுவே முதல் முறை' என சொல்கிறார் அந்த பாம்பை பிடித்த அடில் மிர்சா.

ஒன்னரை அடி நீளம் இருந்த அந்த பாம்பு பிறந்து இரண்டு வாரமான குட்டி என அடில் தெரிவித்துள்ளார். அந்த பாம்பு தற்போது டேராடூனில் வனவிலங்கு பூங்காவில் பத்திர படுத்தப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் அதை பரிசோதித்து வருகின்றனராம். அது முடிந்த பிறகு ஆய்வுக்காக அதை ஆய்வுக் கூட்டத்தில் வைப்பதா? இல்லை வனத்தில் விடுவதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via