சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த வழக்கு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டது உறுதியான உரிமம் ரத்து

by Staff / 05-06-2022 04:40:54pm
சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த வழக்கு  சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டது உறுதியான உரிமம் ரத்து

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த வழக்கில் இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பபட்ட  நிலையில் குழந்தைகள் நல காப்பகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ இயக்குனர் விஸ்வநாதன் இந்த வழக்கில் மேலும் சில மருத்துவமனைகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக கூறினார். சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டால் அவரின் உரிமைகள்ரத்து  செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories