கேரளாவில் மகன் மற்றும் மகளை ஆற்றில் வீசிக் கொன்று விட்டுத் தந்தையும் தற்கொலை

கேரள மாநிலஅழுவாவில் மகன் மற்றும் மகளை ஆற்றில் வீசிக் கொன்று தந்தையும் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மணப்புரம் ஆற்றுப் பாலத்தின் இரு பிள்ளைகளுடன் வந்த நபர் ஒருவர் பின் ஒருவராக இரு குழந்தைகளும் ஆற்றில் வீசிவிட்டு தானும் குதித்தார். இதை கண்ட அருகில் இருந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர் குழந்தைகள் இருவரும் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மூன்று மணிநேர தேடுதலுக்கு பின் அந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர்பலேரிவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஹரிஹரன் என தெரிவித்த போலீசார் எதற்காக இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார் என விசாரித்து வருகின்றனர்.
Tags :