குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 

by Admin / 04-02-2026 01:26:44pm
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 

 

இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தின் முடிவில் வரும் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அ.தி.முக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவதாக ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் ,

மாணவர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கல்வி கடனை அதிமுக அரசு பதவி ஏற்றதும் முழுமையாக ரத்து செய்து அந்த நிலுவை தொகையை அரசை ஏற்கும். 

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். 

 ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவியும் படுகாயம் அடைவோருக்கு இரண்டு லட்சம் நிதி உதயம் அளிக்கப்படும். 

 முதியோர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் .

மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 

சிறுபான்மையின சுய உதவிக் குழுக்களுக்கு சிறு தொழில் தொடங்க வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்றும் ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டார். ஜனவரி 17 அன்று முதல் கட்ட வாக்குரிகளில் மகளிர்க்கு மாதம் 2000 ரூபாய் வழங்கும் கொலை வழக்கு திட்டம் ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் 150 நாட்கள் வேலை வாய்ப்பு ஊர்தி திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via

More stories