சிறிய எழுத்துப் பிழைகளை காரணமாக கொண்டு வாக்காளர்களை நீக்க முயற்சி-மம்தா பானர்ஜி

by Admin / 05-02-2026 08:59:40am
 சிறிய எழுத்துப் பிழைகளை காரணமாக கொண்டு வாக்காளர்களை நீக்க முயற்சி-மம்தா பானர்ஜி

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கைக்கு எதிராக நேரில் ஆஜராகி வாதிட்டார். இந்த எஸ் ஐ ஆர் நடவடிக்கை வாக்காளர்களை சேர்க்க பயன்படுத்துவதற்கு பதிலாக உண்மையான வாக்காளர்களை நீக்குவது ஏன் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில் மேற்குவங்க மட்டும் ஏன் குருவிக்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பெயர்களில் உள்ள சிறிய எழுத்துப் பிழைகளை காரணமாக கொண்டு இலட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்க முயற்சி நடப்பதாகவும் வாக்காளர் அடையாளத்திற்காக ஆதார் அட்டையை தேர்தல் ஆணையம் ஏற்பதில்லை என்றும் கூடுதல் ஆவணங்களை கேட்டு மக்களை துன்புறுத்துவதாகவும் அவர் வாதாடினார். தேர்தல் அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் தேர்தல் ஆணையம் உத்தரவுகளை பிறப்பிப்பதாக கூறி அதை வாட்ஸ் அப் கமிஷன் என்று அவர் விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து தலைமையில் நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு எந்த ஒரு தகுதி உள்ள வாக்காளரும் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது என்று வலியுறுத்தியதோடு இதுகுறித்து பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தர்விட்டார்.

 

Tags :

Share via