ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ்
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 15ஆம் தேதி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்து அவருக்கு ஏதேனும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனிடையே, செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதால் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
Tags :



















