ஆறு பெண்கள் அதிகாலையில் தப்பி ஓட்டம்
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் அன்னை சத்யா பெண்கள் காப்பகம் உள்ளது. இங்கு ஆதரவற்ற பெண்கள் தங்கியிருந்து கல்வி கற்கின்றனர். இது தவிர, வழக்குகள், காதல் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கி குறைந்த நிலையில் உள்ள பெண்களை போலீசார் மீட்டு இந்த அரசு காப்பகத்தில் பாதுகாப்பளித்து வருகின்றனர். இங்கு 20-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்த நிலையில் வழக்கம்போல் இரவு உணவு அருந்திவிட்டு தூங்க சென்றுள்ளனர். அதிகாலையில் அங்கிருந்த ஆறு பெண்கள் பாதுகாவலரின் அறையை தாழிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :



















