விபத்துக்குள்ளான அமெரிக்க விமானப்படை விமானம்

by Staff / 31-01-2024 03:05:03pm
விபத்துக்குள்ளான அமெரிக்க விமானப்படை விமானம்

தென்கொரியாவில் அமெரிக்காவிற்கு சொந்தமான விமானப்படைத்தளம் செயல்பட்டு வருகிறது. இதில் அமெரிக்க விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் தென்கொரியாவில் வடக்கு ஜொயலா மாகாணம் ஜிக்டோ தீவு அருகே மேற்கு பசுபிக் கடல் பகுதியில் ஃஎப்.16 ரக அமெரிக்க போர் விமானம் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் கட்டுப்பாட்டை இழந்தவுடன் விமானி பாராஷூட் மூலம் வெளியே தப்பினார். தென்கொரிய விமானப்படையினர் கடலில் விழுந்த விமானியை பத்திரமாக மீட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo