ஊழலில் இந்தியா 93 ஆவது இடம் - வெளியானது ஆய்வு

by Staff / 31-01-2024 03:29:07pm
ஊழலில் இந்தியா 93 ஆவது இடம் - வெளியானது ஆய்வு

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள 2023ம் ஆண்டுக்கான உலகின் ஊழல் மிகுந்த 180 நாடுகளின் பட்டியலில் 39 புள்ளிகளுடன் 93வது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா.100 புள்ளிகள்(குறைந்த ஊழல்), ௦ புள்ளிகள் (அதிக ஊழல்). நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 90 புள்ளிகளுடன் டென்மார்க் ஊழலற்ற நாடாக முதலிடத்திலும், 11 புள்ளிகளுடன் ஊழல் மிகுந்த நாடாக சோமாலியா கடைசி இடத்திலும் உள்ளன.

 

Tags :

Share via