பணியில் இருந்த காவல்துறை அதிகாரி திடீர் மரணம்
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் தாமரசேரி ஸ்டேஷன் முதன்மை எஸ்.ஐ. வி.எஸ்.சனுஜ் மாரடைப்பால் காலமானார்.
இன்று காலை ஸ்டேஷனுக்கு பணிக்கு வந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தாமரச்சேரி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
தொடர்ந்து அங்கிருந்து, மேற்சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் கோழிக்கோடு கோவூரைச் சேர்ந்தவர்.
எஸ்.ஐ மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக காவல்துறை அதிகாரிகள், போலீசார், பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :