லாட்டரி அதிபர் மார்டின்,ஆதவ் அர்ஜுனா வீடு உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை.
சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது இல்லத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச்சில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 7 கோடியே 20 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. பின்னர், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மார்ட்டின் உள்ளிட்டோருடன் இணைந்து, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த தொகை என நாகராஜன் வாக்குமூலம் அளித்தார்.
இதனையடுத்து, நாகராஜன், மார்ட்டின் மற்றும் அவரது மனைவி லீமா ரோஸ் உள்ளிட்ட 4 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கைக் கொண்டு, சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவக்கியது.இந்நிலையில்,
சென்னை, கோவையில் லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
மார்டின் மருமகனும், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனா வீடு உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனைநடத்தப்பாட்டு வருகிறது.
Tags : லாட்டரி அதிபர் மார்டின்,ஆதவ் அர்ஜுனா வீடு உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை.