முக்கிய நிகழ்வுகள்

by Editor / 09-02-2022 10:46:32am
முக்கிய நிகழ்வுகள்

 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி இந்திய சமூக சேவகர் பாபா ஆம்தே மறைந்தார்.


பிறந்த நாள் :-

*ஜாக்குவஸ் மோனாட்
 மூலக்கூறு உயிரியலின் சிற்பி ஜாக்குவஸ் லூசியன் மோனாட் 1910-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிறந்தார்.

 இவர் பட்டம் பெற்ற பிறகு பரிணாம வளர்ச்சி, டிஎன்ஏ,ஆர்என்ஏ மரபணுக்கள், கேலக்டோசிடேஸ் எனப்படும் என்சைம் தொகுப்புகள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

 நோய் எதிர்ப்பாற்றல் துறை வல்லுநர் மெல்வினுடன் இணைந்து செரிமான நொதியை உற்பத்தி செய்ய ஒரு உள் சமிக்ஞை தேவைபடுவதை 1943-ஆம் ஆண்டு இவர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வு முடிவுகளை தொகுத்து பொதுவான தூண்டல் கோட்பாட்டை வெளியிட்டனர்.

 இவர் விஞ்ஞானி ஜேக்கப்புடன் இணைந்து புரோட்டீன் தொகுப்பு மாதிரியை உருவாக்கினார்.மேலும் ஆப்ரேட்டர்,கட்டமைப்பு மரபணு என்ற 2 முக்கியமான மரபணுக்களையும் கண்டறிந்தனர்.

 இவர் பிரான்கோயிஸ் ஜேக்கப்,ஆண்ட்ரே லூஃப் ஆகிய ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ஜீன்கள், நொதிகளை உருவாக்குவதன் மூலம் செல்களின் வளர்சிதை மாற்றத்தை நெறிப்படுத்துவது தொடர்பான கண்டுபிடிப்புக்காக 1965-ஆம் ஆண்டு இவர்கள் மூவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 மூலக்கூறு உயிரியலின் தந்தை எனப் போற்றப்படும் ஜாக்குவஸ் லூசியன் மோனாட் 66-வது வயதில் (1976)மறைந்தார்.

 

Tags :

Share via