ஐந்து மில்லியன் டாலர் முதலீடு செய்தால் குடியுரிமை-அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா குடியுரிமை பெறுவதற்கான புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். அதன்படி அமெரிக்காவில் ஐந்து மில்லியன் டாலர் முதலீடுகள் செய்தால் குடியுரிமை அதாவது கோல்ட்காா்டு- தங்கஅட்டை வழங்கப்படும் என்கிற ஒரு அறிவிப்பை செய்து உள்ளார்..இந்திய மதிப்பில் 40 கோடிக்கு மேல் என்பது பெரும் பணம் படைத்தவர்களுக்கு எளிதாக அமையலாம் .
இந்த தங்கஅட்டை முதலீட்டாளர்களுக்கான 35 ஆண்டுகால திட்டத்தை மாற்றுவதற்காக அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான சாத்தியம் உள்ள சூழலை உருவாக்கியுள்ளது.. இந்த ட்ரம்பின் முயற்சியில் ஓரும் மில்லியன் டாலரை முதலீடாக செய்பவர்களுக்கு அமெரிக்கா விசாக்களை இ பி 5 திட்டத்தை மாற்றும் என்றும் குறைந்த பட்சம் பத்து பேருக்கு வேலை வழங்கக்கூடிய நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் சாதகமாக அமையும். உலகில் அதிக ஏற்புடைய நாடாக கருதப்படும் அமெரிக்காவை நோக்கி மற்ற நாடுகளில் உள்ள பணக்காரர்கள் வந்து குடியேறுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.. நிறுவனங்கள் இந்த தங்க அட்டையை வாங்கி அதற்கு ஈடாக புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்த விசாக்களை பெறுவதற்கும் இதில் வாய்ப்பு உள்ளது.. இந்த புதிய திட்டம் குடியுரிமை பெறுவதற்கான வழிகளை இபி 5 திட்டத்திலிருந்து வேறுபடுத்தும் என்றும் இந்த தங்க அட்டைக்கு தகுதி உடையவர்களை தேர்ந்தெடுக்கும் செயல்முறைகள் செயற்பாட்டில் உள்ளதாகவும் குற்ற ம் கூறினார். .சீனா, ஈரான் போன்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு அனுமதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு நாடுகளின் அடிப்படையில் கட்டுப்படுத்தப்படாமல் தனி நபர்களின் அடிப்படையில் அது அமையலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த தங்க அட்டை குறித்து கூறும் பொழுது இது ஓரளவிற்கு பச்சை அட்டை அதாவது கிரீன் கார்டு போன்றது தான் என்றும் ஆனாலும் உயர்ந்த அளவில் நுட்பமாக உள்ளது என்றும் இது மக்களுக்கு குடியுரிமை பெறுவதற்கான ஒரு பாதை செல்வந்தர்கள் அல்லது சிறந்த திறமைசாலிகள் நுழைவதற்கு பணம் செலவு ஊத்துவதின் மூலம் வாய்ப்பு தரப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார் m இதன் மூலம் ஈபி5 விசாக்களின் மோசடிகளில் இருந்து பாதுகாப்பான சூழல் உருவாக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.அங்கேயே படித்து வேலை பெற்றிருக்கின்ற இந்தியர்களுக்கு எந்த விதமான அனுகூலம் தரப்போகிறது என்று தெரியவில்லை. பல இந்தியர்கள் அமெரிக்காவில் குடியுரிமை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக அங்கே வேலை செய்து அங்கேயே வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
Tags :