காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.

by Staff / 06-10-2025 09:51:37am
காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.

தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (அக்.6) திறக்கப்படுகின்றன. இதையடுத்து முதல் நாளிலேயே மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாடநூல்களை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை விநியோகிக்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags : காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.

Share via