கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று உதவவேண்டும்- தவெக தலைவர் விஜய் .

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின்னரே மக்களை சந்தித்து பரப்புரையில் ஈடுபடுவேன் என கட்சி நிர்வாகிகளிடம் தொலைபேசி வாயிலாக தவெக தலைவர் விஜய் தெரிவித்தார். 20க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களுடன் பேசிய விஜய், “கரூர் சம்பவம் தொடர்பாக வரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டாம். எல்லாம் சரியாகி விடும், நான் உங்களுடன் இருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று உதவவேண்டும்” என அறிவுரை வழங்கினார்.
Tags : தவெக தலைவர் விஜய்