அன்புமணி மீதான வழக்கு ரத்து

என்எல்சி-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்கு எதிராக அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புமணி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Tags :