தாக்குதல் நடந்த இடத்தை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த அமித் ஷா

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த பகுதிக்கு, ஹெலிகாப்டரில் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார். தொடர்ந்து, இறந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்தனர்.
Tags :