பந்து என நினைத்து விளையாடிய சிறுவன் பலி

by Staff / 26-10-2022 03:29:42pm
பந்து என நினைத்து விளையாடிய சிறுவன் பலி

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள காக்கினாரா மற்றும் ஜகத்தால் ரயில்வே நிலையங்களுக்கு இடையே இருந்த தண்டவாளம் அருகே சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது தண்டவாளம் அருகே ஒரு பொட்டலம் கிடந்ததுள்ளது. அதைக் கண்ட ஒரு சிறுவன் அதனை பந்து என நினைத்து கையில் எடுத்து விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பந்து திடீரென வெடித்துச் சிதறியது. அதில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த வெடிகுண்டு ரயிலுக்கு வைக்கப்பட்டதாக தெரியவந்தது.

 

Tags :

Share via

More stories