உள்ளாடைக்குள் கடத்திவரப்பட்ட 40.35 லட்சம் மதிப்புடைய தங்கம்.! -மடக்கி பிடித்து கைது செய்த அதிகாரிகள்.!

by Admin / 24-07-2021 05:12:59pm
உள்ளாடைக்குள் கடத்திவரப்பட்ட 40.35 லட்சம் மதிப்புடைய தங்கம்.! -மடக்கி பிடித்து கைது செய்த அதிகாரிகள்.!


 உள்ளாடைக்குள் கடத்திவரப்பட்ட 40.35 லட்சம் மதிப்புடைய தங்கம்.! -மடக்கி பிடித்து கைது செய்த அதிகாரிகள்.! துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.40.35 லட்சம் மதிப்புடைய 810 கிராம் தங்கத்தை சென்னை விமானநிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து சென்னை பன்னாட்டு விமானநிலையத்திற்கு எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம்  ஒன்று வந்தது. இதில் வந்த பயணிகளை வழக்கம்போல சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது விழுப்புரத்தை சோ்ந்த சந்துரு சக்திவேல்(23) என்ற பயணி மீது சுங்கத்துறை அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டது.அவரை நிறுத்தி சோதனையிட்டதில் அவருடைய உள்ளாடைக்குள் 4 பாா்சல்களில் தங்க பேஸ்ட்டை மறைத்து எடுத்து வந்திருப்பதை கண்டுபிடித்தனா். இதில் மொத்தமாக ரூ.40.35 லட்சம் மதிப்புள்ள 810 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா். இதையடுத்து தங்கம் கடத்தி வந்த பயணி சந்துரு சக்திவேலை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

 

Tags :

Share via

More stories