கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மட்டும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது இதனால் சென்னை-திருச்சி, உளுந்தூர்பேட்டை-சேலம் நான்கு வழி சாலைகளில் செல்லும் வாகனங்களை ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கிடையே மெதுவாக ஓட்டி செல்கின்றனர் அதேபோல் கடும் பனிப்பொழிவால் ஏற்பட்டுள்ள கடும் குளிர் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர் இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பென்னாடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பொன்னேரி, இறையூர், முருகன்குடி, கொள்ளத்தங்குறிச்சி, அருகேரி, கொத்தட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர் மேலும் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
Tags :